தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

மம்முட்டி நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளரும் அறிமுக இயக்குனருமான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். கேரளாவில் குற்றம் செய்துவிட்டு வட மாநிலங்களில் சென்று ஒளிந்து கொண்ட ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரி தனது சகாக்கள் சிலருடன் நடத்தும் தேடுதல் வேட்டையாக இந்த படம் உருவாகி இருந்தது. போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார்.
அப்படி அந்த குற்றவாளியை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர்கள் முகாமிட்டிருக்கும் போது திக்ரி என்கிற கிராமத்தில் உள்ள சிலர் மம்முட்டி உள்ளிட்ட குழுவினர் மீது அதிரடி தாக்குதல் நடத்துவார்கள். அப்படி தாக்கும் அந்த கூட்டத்தில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். படத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சண்டைக்காட்சியில் நடித்ததின் மூலம் குறிப்பாக மம்முட்டியுடன் தாக்குதல் நடத்தியதன் வாயிலாக பிரபலமாகியுள்ளார் நடிகை கேத்தரின் மரியா என்பவர்.
இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒரு கதாநாயகியின் தோழியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை தெரிந்த பெண் வேண்டும் என படக்குழுவினர் ஆடிஷன் வைத்தபோது அதில் தேர்வானார் கேத்தரின் மரியா. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியபோது அவர் வட மாநில பெண் போல மேக்கப் போட்டிருந்ததால் நடிகர் மம்முட்டியே, அவரை வட மாநில பெண் என்றே நினைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாராம். அதன்பிறகு தான் அவர் மலையாளி என தெரியவர ஆச்சரியப்பட்டாராம் மம்முட்டி.




