‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ |
அஜித் நடித்த 'வீரம்' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ஷியாஸ் கரீம். தற்போது மலையாள படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மலையாள 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதோடு எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி மையமும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் காசர்கோடு மாவட்டம் பெருன்னா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷியாஸ் கரீம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், 11 லட்சம் ரூபாயை பறித்ததாகவும் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷியாஸ் கரீம் துபாய்க்கு தப்பிச் சென்றார்.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இந்த தகவல் அறிந்ததும் சுங்கத் துறையினர் அவரைப் பிடித்து சந்தேரா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சந்தேரா போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.