'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்ததாக முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற காமெடி படத்தையும் இயக்கி, அதிலும் வெற்றி பெற்றார். லூசிபர் படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார் பிரித்விராஜ்.
சில தினங்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி படத்திற்கான பூஜையுடன் போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துவக்க நாளில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற பூஜை குறித்த சில புகைப்படங்களை நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம், மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.