21 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸாகும் விஜய்யின் சிவகாசி | ஒடிடியை கலக்க வரும் 'தாய் கிழவி' : இந்த வார லிஸ்ட் | தமிழ் சினிமாவின் ‛துரந்தர்', ‛மிஸ்டர். எக்ஸ்' : இயக்குனர் மனு ஆனந்த் | என்னை ஏமாற்றிய லோகா படக்குழு : மம்முட்டி | செல்வராகவனுடன் நடித்தபோது பயத்தில் நடுங்கினேன் : நடிகை ஹேமா | துரந்தர் 2 ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது | சிறை பின்னணியில் உருவாகும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு | ரஜினியின் ‛ஜெயிலர் 2' தள்ளிப்போகிறதா? | 'நீளிரா' படத்தை உயிர்த்தெழச் செய்யுங்கள்: கார்த்திக் சுப்பராஜ் உருக்கமான வேண்டுகோள் | காக்கி சர்க்கஸ் : ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் |

மலையாள திரை உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த ஆறேழு ஆண்டுகளாக அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்தி வரும் சுரேஷ்கோபி, அது தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று அவர் பேசிய பேச்சு ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதாவது கடவுள் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் அழிவார்கள் என்று அவர் பேசியதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ்கோபி, “நான் அந்த நிகழ்வில் பேசிய முழுமையான பேச்சை வெளியிடாமல், தங்களுக்கு வேண்டியபடி வெட்டியும், ஒட்டியும் எடிட் செய்து என் மீது தவறான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எனது அன்பு எதிரிகள் இந்த வேலையை செய்துள்ளனர். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் குறித்தும் நான் மரியாதையை வைத்திருக்கிறேன். அதனால் ஒருபோதும் நான் அப்படி பேச வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியுள்ளார்.




