மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கடந்த சங்கராந்தி பண்டிகை ரிலீஸாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கும் தனது புதிய படத்தை சமீபத்தில் அறிவித்தார் அனில் ரவிபுடி. வெங்கடேஷ் மட்டுமல்லாது இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நந்தமூரி கல்யாண் ராமும் நடிக்கிறார்.
படத்தில் யார் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அனில் ரவிபுடி. இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில் தனது பட கதாநாயகி யார் என்கிற சஸ்பென்ஸ் உடைக்கும் விதமாக தன்னுடைய படத்திலும் கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற தகவலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் அனில் ரவிபுடி.
அதே சமயம் இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிப்பது வெங்கடேஷுக்கு அல்ல.. நந்தமூரி கல்யாண் ராமுக்கு தான் என்று சொல்லப்படுகிறது. வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே உலா வருவது குறிப்பிடத்தக்கது.