மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

திரையரங்கில் வெளியாகும் ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றால், அதே வரவேற்பை ஓடிடியிலும் பெறுகிறது. சில சமயங்களில் திரையரங்கில் வெளியாகி நாட்களை கடந்தாலும், அவை எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று காத்துக்கிடந்து பார்க்கும் ரசிகர்களும் இங்கு ஏராளம். அந்தளவிற்கு ரசிகர்களுடன் பிரிக்க முடியாத பந்தமாக ஓடிடி தளம் உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
தாய் கிழவி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'தாய் கிழவி'. நடிகை ரதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 75கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படம் நாளை(ஏப்.10ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
ஹால்
ஷேன் நிகம் மற்றும் சாக்ஷி வைத்யா நடித்த மலையாள காதல் படமான "ஹால்" நாளை (ஏப்.10ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
காக்கி சர்க்கஸ்
நடிகர் முனிஷ்காந்த் மற்றும் ராஜேஷ் மாதவன் நடிப்பில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான 'காக்கி சர்க்கஸ்' தமிழ்-மலையாள நகைச்சுவை த்ரில்லர் தொடர், 7 தொடர்களைக் கொண்டது. இந்த வெப் தொடர் நாளை(ஏப்.10ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
நாங்கள்
அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் 2025ல் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் நாங்கள் (Naangal). இந்த படம் நாளை(ஏப்.10ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கனிமங்கலம் கோவிலகம்
மலையாள இயக்குநர் ராஜூவ் மோகன் இயக்கத்தில் காமெடி கலந்த திகில் படமான'Kanimangalam Kovilakam' நாளை(ஏப்.10ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.