தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது மோகன்லால் இணைந்து நடித்து திரைக்கு வரும் 'பேர்ட்ரியாட்' படத்தின் புரோமொஷனுக்காக மம்முட்டி அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக லோகா படத்தை குறித்த கேள்விக்கு மம்முட்டி கூறியதாவது, "லோகா படத்தில் முதலில் நான் உள்ளேன் என்பது எனக்கு தெரியாது. அதில் 'வேண்டாம் என்கிற ஒரே வசனம் மட்டும் நான் பேச வேண்டும் என கூறினார்கள்.
அந்தப் படத்தில் என்னுடைய கையாக காட்டப்பட்டது கூட எனது கை இல்லை. அந்த படம் வெளியான பின்னர் தான், அது நீங்கள் குரல் கொடுத்துள்ள கதாபாத்திரம் (மூத்தோன்) கை என்று கூறினார்கள். இப்போது அதில் நான் நடித்து ஆக வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருக்கிறது. உண்மையில் அவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். இனி அந்த படத்தில் நான் நடிக்க வேண்டுமானால், அவர்கள் எனக்கு தரும் சம்பளத்தின் மூலம் தான் என்னை சம்மதிக்க வைக்க வேண்டும்". என இவ்வாறு மம்மூட்டி ஓபன் ஆக பேசியுள்ளார்.




