பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' |

கடந்த 2005ம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'சிவகாசி' . ஆக் ஷன், பேமிலி டிராமா ஜானரில் வெளியான இப்படம் அந்த காலகட்டத்தில் வெற்றி படமாக அமைந்தது. சமீபகாலமாக இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகளை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று சிவகாசி படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த அடுத்த நாள் ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். இதனை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் சக்தி பிலிம் பேக்டரி கில்லி படத்தை எப்படி கடந்த பார்லிமென்ட் தேர்தல் சமயத்தில் ரீ ரிலீஸ் செய்து வெற்றி பெற்றார்களோ அதே யுக்தியை மீண்டும் சிவகாசி பட ரீ ரிலீஸில் பயன்படுத்துகின்றனர்.