Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆவேசம் பட இயக்குனரின் உதவியாளர் படத்தை துவங்கி வைத்த சூர்யா, நஸ்ரியா

07 ஏப், 2026 - 01:10 IST
எழுத்தின் அளவு:
Suriya-and-Nazriya,-who-started-the-film-as-assistants-to-the-director-of-Aavesam
Advertisement

மலையாளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் வெற்றியை பெற்றது. இதை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் ரோமாஞ்சம் என்கிற வெற்றி படத்தையும் கொடுத்திருந்தார். ஆவேசம் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் 47வது படத்தை இயக்கி வருகிறார் ஜித்து மாதவன். இதில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜித்து மாதவனிடம் ரோமஞ்சம் மற்றும் ஆவேசம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷிபினா பாபின் பாக்கர் என்பவர் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்த துவக்க விழா பூஜையில் சூர்யா, நஸ்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் கிளாப்பை சூர்யா அடித்து படத்தை துவங்கி வைத்தார். கொடுங்கொல்லூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஷேன் நிகம்அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ... வெங்கடேஷ் படத்தில் இணைந்த கிர்த்தி ஷெட்டி ; ஆனால் ஜோடியாக அல்ல வெங்கடேஷ் படத்தில் இணைந்த கிர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap