சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம், ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில இடங்களில் ரஜினியும் அதை சொன்னார். ஆனால், சமீபத்தில் அவர் அளித்த ஏர்போர்ட் பேட்டிகளில் ஜெயிலர்2 பட ரிலீஸ் குறித்து பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். நானும், கமலும் இணைந்து நடிக்கும்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 ஜூனில் வெளியாக வாய்ப்பில்லை. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாக்கி இருப்பதால் ஆகஸ்ட் மாதம் வரலாம் என்று கூறப்பட்டது. இப்போது இன்னும் தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஜினியின் 50வது சினிமா ஆண்டில் ஜெயிலர்2 வெளியாக உள்ளதாலும், அதில் பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாலும் ரிலீஸ் தேதியை பக்காவாக அறிவிக்க வேண்டும்.
அந்த தேதி மற்ற மொழிகளில் இந்த படத்துக்கு பாதிப்பு இருக்க கூடாது என்று பட நிறுவனம் நினைக்கிறதாம். அதனால், ரிலீஸ் தேதி விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. ஜெயிலர் 2 ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்று திட்டமிடுவதால் இந்த ஏற்பாடுகளாம்.