சினிமாவில் அடிவாங்கினா கூட வருத்தப்படுவாங்க அம்மா: நடிகர் ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி | எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார் | முரண்களை கடந்த முழுமையான அன்பு இது | கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்! | மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! | யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! | சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்! | நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள் | விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் | சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் |
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். சாச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிருத்விராஜும், பிஜுமேனனும் நடித்திருந்தார்கள். ஒரு போலீஸ் சப் இன்ஸ் பெக்டருக்கும், ஒரு இளம் ராணுவ வீரனுக்குமான ஈகோ மோதல் தான் கதை. 5 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 52 கோடி லாபம் ஈட்டியது.
தற்போது இந்தப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் பிறமொழி ரீமேக் உரிமத்தை போனி கபூர் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் இதன் ரீமேக் பணிகள் தொடங்கி விட்டது. இதில் ராணா, பவன் கல்யாண் நடிக்கிறார்கள்.
ஹிந்தி ரீமேக் பணிகளும் தொடங்கி உள்ளது. இதில் அபிஷேக் பச்சனும், ஜான் ஆபிரஹாமும் நடிக்கிறார்கள். மிஷன் மங்கல் படத்தை இயக்கிய ஜெகன் ஷக்தி இயக்குகிறார். ஜூலை மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹிந்திக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு படமாக்கப்பட இருக்கிறது.