ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சண்டக்கோழி- 2 ஐ தொடர்ந்து புதிதாக தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ஹரிகிருஷ்ணன், அவரது பேட்டி:
உங்கள் குடும்பம் பற்றி....
சென்னை அயனாவரத்தில் வசிக்கிறேன். அப்பா அன்புதுரை, ரயில்வே பணியாளர். இறந்து விட்டார். அம்மா விஜயசங்கரி, குடும்பத் தலைவி, என்னுடன் வசிக்கிறார். என் உடன் பிறந்த அக்கா சென்னையில் உள்ளார். எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.
சினிமாவில் நடிக்க வீட்டில் ஆதரவு எப்படி..
முழு சுதந்திரம் உண்டு. குறிப்பாக அம்மா, நீ நல்லா இருந்தா போதும் என்பார். நான் சினிமாவில் சேர விரும்பியதும் தடையேதும் சொல்லாமல் ஊக்கப்படுத்தினார். நண்பர்கள் இரவு 12:00 மணிக்கு வந்தாலும் முகம் சுளிக்காமல் டிபன் செய்து கவனிப்பாங்க. ஆட்டம் பாட்டம் முடிந்து நண்பர்கள் சென்ற பிறகு காலையில் ‛தம்பி ஏதோ தப்பு பண்றமாதிரி தெரியுதுப்பா பார்த்துக்கோ' என்று அன்பாக சொல்லி திருத்துவதில் அம்மாவிற்கு நிகர் அவங்க தான்.
பள்ளி காலங்களில் அம்மாவிடம் அடிவாங்கியது உண்டா
சிறு வயதில் படிப்பு விஷயத்தில் நான் வாலுத்தனம் செய்வேன். அம்மாவிடம் ‛செம அடி' கிடைக்கும். அவங்களது கண்டிப்பு அன்று கசப்பாக இருந்தாலும் இன்று நல்ல மனிதனாக வாழ கற்றுக்கொடுத்துள்ளது. அம்மாவிற்கு வாட்ச், புடவை வாங்கி கொடுப்பேன். நான் எதுவாங்கி கொடுத்தாலும் நல்லா இருக்கு என்பார். நான் வெளியூர் சூட்டிங் சென்றாலும் போன் செய்து, தம்பி சாப்பிடியா, நேரத்திற்கு தூங்கு என ‛அட்வைஸ்' செய்வாங்க.
அம்மாவிடம் பிடித்தது, கற்றுக் கொண்டது
அவங்க கருவாட்டு குழம்பு வைப்பது சூப்பராக இருக்கும். அம்மாவை பொறுத்தமட்டில் எல்லாமே நேரத்திற்கு நடந்துவிட வேண்டும். நிறைய புத்தகங்களை படிப்பாங்க. நேரமேலாண்மையை நானும் கடைப்பிடிக்க அம்மா தான் காரணம். இந்தாண்டு அன்னையர் தினத்தை ஞாபகப் படுத்திய தினமலர் நாளிதழுக்கு நன்றி. அன்னையர் தினத்தில் அம்மாவிற்கு பரிசு வாங்கி தர முடிவு செய்துள்ளேன்.
சூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா வந்தது உண்டா
அவங்க வரமாட்டாங்க. மெட்ராஸ் படத்தில் ஜானி கேரக்டரில் நான் அடிவாங்குவதை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டாங்க. ரைட்டர் படத்தில் நான் சாகும் காட்சி இருந்ததால் பார்க்க மருத்து விட்டார். நீ அடிவாங்கிற மாதிரி, இறக்கிற மாதிரி காட்சி இருந்தால் முதலில் சொல்லிவிடு. நான் வரமாட்டேன் என் கூறிவிடுவார். அந்த அளவிற்கு பிரியமாக இருப்பார். அம்மா ரஜினியின் தீவிர ரசிகை. கபாலியில் அவருடன் நடித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ரஜினியை சந்திக்க அம்மாவை அழைத்துச் செல்ல உள்ளேன்.