15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் | தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? |

வானத்தை போல தொடரில் துளசி கதாபாத்திரத்தில் முதலில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணெதிரே தோன்றினாள் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஸ்வேதா தன்னுடன் கல்லூரியில் படித்த விராந்த் ரஞ்சன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் ஸ்வேதாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் வைத்து இருவருக்கும் கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. ஸ்வேதா - விராந்த் ரஞ்சன் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது,. ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.