சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமான 'மகாராஜ்' படம் கடந்த ஜனவரியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜ் வழக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் கிஷோரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய்தீப் அலாவத் இடம் பாத சேவைக்காக செல்லும் ஷாலினி பாண்டே மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சையான காட்சியில் நடித்தது பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காத ஷாலினி பாண்டே, முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க முயற்சித்தேன். அதனாலேயே அந்த காட்சிப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. முடிந்தளவு வேகமாகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது. காட்சியில் நடித்தபிறகே நெருடலாக இருப்பதை உணர்ந்தேன். சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, 'இப்போ என்ன நடந்துச்சு' என எண்ணினேன்; அதுதான் யதார்த்தம். படம் வெளியான பிறகே ரொம்ப நெருடலாக உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.