ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ள இந்தோ - பிரெஞ்சு திரைப்படம் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்'. புதுமுகங்கள் ப்ரீத்தி பாணிகிரஹி மற்றும் கேசவ் பினோய் கிரண் ஆகியோர் முதன்மை வேடத்திலும், நடிகை கனி குஸ்ருதி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுசி தலாதி இயக்கியுள்ளார். நடிகை ரிச்சா சதா மற்றும் நடிகர் அலி பசல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
நடிகை ரிச்சா கூறுகையில், ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' படம் இளமை பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும். இளம் வயதினரின் உண்மையான அனுபவங்களைப் படம் பிடித்துக் காட்டும் படம் இது. எங்களின் கனவுத் திட்டத்தின் உலகளாவிய கருப்பொருள் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் எதிரொலித்தது. சில முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தையும் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் இப்போது இந்தியாவில் பிரைம் வீடியோவில் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது" என்றார்.
அலி பசல் கூறுகையில், “கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் என்பது ரிச்சாவுக்கும் எனக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது தயாரிப்பாளர்களாக எங்களின் முதல் திட்டம். நிறைய பேரின் கடின உழைப்பு இந்த படத்தில் உள்ளது. இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. சர்வதேச பார்வையாளர்களின் வரவேற்பு ஊக்கமளிக்கிறது. இந்த படம் வருகிற டிச., 18ல் டிஜிட்டல் தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. '' என்றார்.