மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து ராம்சரண் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது அவருடைய கதாபாத்திரம் தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் லீக் ஆனது.
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்ததாக படத்தின் நாயகி கியாரா அத்வானியின் கதாபாத்திரம் தோற்றம் கொண்ட புகைப்படம் படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்துள்ளது. பொதுவாகவே ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த ஒரு விஷயமும் வெளியே போகாதவாறு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அதையும் மீறி இப்படி நாயகன், நாயகி இருவரின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி இருவருமே இந்த படத்தில் அரசு அதிகாரிகளாக நடிக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் கசிந்த இருவரது புகைப்படங்களும் அதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.