கடந்த 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவகன், இலியானா நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தெலுங்கில் இந்தப்படம் ரீ-மேக் ஆக போகிறது. அதன்படி, பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக ரவி தேஜா நடிப்பதாக அறிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.