மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
சென்னை : 80களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார்.
இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் நிறைவடைந்த பின்னர் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா உள்ளிட்ட விபரம் தெரியவரும்.