செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ராஜ்குமார் குப்தா இயக்கத்தில், அஜய் தேவ்கன், ரிதேஷ் தேஷ்முக், வாணி கபூர் மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'ரெய்டு 2'. 2018ம் ஆண்டு அஜய் தேவ்கன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ரெய்டு' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த 'ரெய்டு 2' தற்போது ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
முதல் பாகத்தின் வசூல் மொத்தமாக 150 கோடி வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் 10 நாட்களில் 112 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் மூன்று மடங்கு அதிகம் என்பதால் படம் இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது.
ஹிந்தித் திரையுலகத்தில் இந்த வருடம் வெளிவந்த படங்களில் 100 கோடி வசூலைக் கடக்கும் 6வது படம் இது. 'சாவா' படம் 800 கோடி வசூலில் முதலிடத்தில் உள்ளது. அஜய் தேவ்கனின் நடித்து வெளிவந்த படங்களில் 100 கோடி வசூலைப் பெற்ற 16வது படம் 'ரெய்டு 2'.
இந்த வருடம் மே 1ம் தேதி வெளிவந்த இந்தியத் திரையப்படங்களில் தெலுங்குப் படமான 'ஹிட் 3', தமிழ்ப் படமான 'ரெட்ரோ', ஹிந்திப் படமான 'ரெய்டு 2' ஆகியவை 100 கோடி வசூலைக் கடந்துள்ளது கூடுதல் தகவல்.