டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மத்திய அரசு நம் நாட்டுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த 'இந்தியா' என்ற பெயரை மாற்றி பாரம்பரிய பெயரான 'பாரத்' என்று வைக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த நிலையில் நடிகை கங்கனா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
"மகாபாரத காலத்தில் இருந்தே, குருக்ஷேத்திரப் போரில் பங்கேற்ற அனைத்து ராஜ்ஜியங்களும் பாரதம் என்ற ஒரு கண்டத்தின் கீழ் வந்தன. பாரதம் என்ற பெயர் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இந்தியா என்றால் என்ன?. பழைய ஆங்கிலத்தில் 'இந்தியன்' என்றால் 'அடிமை' என்று அர்த்தம். அதனால் ஆங்கிலேயர்கள் நமக்கும் இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அதுவே அவர்கள் நமக்கு கொடுத்த புதிய அடையாளம். பழங்கால அகராதியிலும் கூட இந்தியன் என்பதன் அர்த்தம் அடிமை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை சமீபத்தில் மாற்றிவிட்டார்கள். மேலும் இது எங்கள் பெயர் அல்ல, நாங்கள் பாரதியர்கள், இந்தியர்கள் அல்ல."
இவ்வாறு கங்கனா பதிவிட்டுள்ளார்.