சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. வட இந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் யாகாவாராயினும் நாகாக்க படத்தில் வில்லனாக நடித்தார். 72 வயதான மிதுன் சக்ரவர்த்தி முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு மிதுன் சக்ரவர்த்திக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை மிதுன் சக்ரவர்த்தியின் மகனும் நடிகருமான மஹாய் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மிதுன் சிகிக்சை பெறும் படமும் வெளியாகி உள்ளது.