ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறை சென்று விட்டு கடந்த அக்டோபர் 28ம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்தார். அவரது ஜாமினுக்காக ரூ.1 லட்சம் கட்டி கையெழுத்திட்டு அவரை வெளியே கொண்டு வந்தவர் ஷாருக்கானின் நெருங்கிய தோழியான நடிகை ஜூகி சாவ்லா.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஆர்யன்கான். இதனையொட்டி அவரது பெயரில் 500 மரக்கன்றுகளை நட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜூகி சாவ்லா. அதோடு ‛பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரியன். உன்னுடைய ஆசைகள் வரும் ஆண்டுகளில் நிறைவேறட்டும். என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் பாதுகாக்கப்பட்டவராகவும், சர்வ வல்லமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்,' என்றும் வாழ்த்தி இருக்கிறார்.