நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கே.டி.முருகன். இவர் தனது மீனவ நண்பர்களுடன் இணைந்து நாகை பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை துவங்கி "வங்கக்கரை" என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். ஜோதிஷா, சைனு என்ற சிறுபட்ஜெட் பட நாயகிகள்தான் ஹீரோயின். "தினமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருப்பன் நாகை மீனவன். எதிர் கரையில் சிங்கள துப்பாக்கி, இக் கரையில் நம்ம போலீஸ் துப்பாக்கி, நடுக்கடலில் சுறா, திமிங்கிலம் இத்தனைக்கும் இடையில் வாழும் மீனவர்களின் கதை. எங்கள் கதையை யாரும் ஒழுங்காக சொல்லவில்லை. அதனால் நாங்களே படம் எடுக்க வந்துவிட்டோம்" என்கிறார் கே.டி.முருகன்.