புட்பால் விளையாட்டு போட்டியை போன்றே பிரபலமானது புட்சால் விளையாட்டு. கால்பந்து விளையாட்டை இண்டோர் ஆடிட்டோரியத்தில் விளையாடும் விளையாட்டு. ஒரு அணிக்கு 5 பேர் வீதம் ஆடுவார்கள். ஒரு விளையாட்டு 15 நிமிடம்தான் நடக்கும். உலகத்தின் பல நாடுகளில் இந்த விளையாட்டு சூதாட்டம் போன்று நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாடுகளில் இந்த விளையாட்டு இன்னும் அறிமுகமாவில்லை.
இந்த விளையாட்டை மையமாக கொண்டு ஒரு தமிழ் படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் எதிர்வீச்சு. மவுனம் சம்மதம், ஏர்போர்ட், படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய குணா இயக்கி இருக்கிறார். சுண்டாட்டம் படத்தில் நடித்த இர்பான் ஹீரோ. மலையாள நடிகை ரஸ்னா ஹீரோயின். சிங்கமுத்து, சின்னி ஜெயந்த், வையாபுரி ஆகியோர் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.
படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர் எஸ்.ராஷிக் கூறியிருப்பதாவது:
கிரிக்கெட்டை மையமாக வைத்து சென்னை&28 வந்த மாதிரி இது புட்சால் விளையாட்டை மையமாக வச்சு காதல், காமெடி கலந்து எடுத்திருக்கோம். படப்பிடிப்பு அனைத்தும் மலேசியாவின் முக்கிய சிட்டியில் நடந்துச்சு. கதையும் மலேசியாவுல நடக்குற மாதிரிதான். தமிழில் எதிர்வீச்சு என்கிற பெயரிலும், வெளிநாடுகளில் கோல் என்ற பெயரிலும் ரிலீஸ் பண்றோம் என்றார்.