மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை |

கடந்த 2020ல் கொரோனா முதல் அலை தீவிரமானபோது அந்த சமயத்தில் பல திரையுலக பிரபலங்களின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி ஒருவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். பாலிவுட்டையும் தாண்டி நேசிக்கப்படும் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர் மறைந்து 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது ஊர் பெயரையே மாற்றி இர்பான் கானின் நினைவாக தங்கள் ஊருக்கு புதிய பெயரை சூட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இகாத்புரி என்கிற நகருக்கு அருகில் உள்ள பட்ரியாச்சா வாடா என்கிற கிராமத்தினர் தற்போது தங்களது நகரத்திற்கு ஹிரோச்சி வாடி என்று பெயரை மாற்றி உள்ளனர். இதற்கு பக்கத்து வீட்டு ஹீரோ என்று அர்த்தம். அதாவது இர்பான் கான் தங்களில் ஒருவர் என சொலும் விதமாக இந்த பெயரை சூட்டியுள்ளனர்.
இர்பான் கான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த சமூக ஆர்வலராக இருந்தார். இந்த ஹிரோச்சி வாடி பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அங்கே ஒரு பண்ணை வீடு வாங்கி வசித்த இர்பான் கான் அவர்களில் ஒருவராகவே தன்னை மாற்றிக்கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு இருக்கிறார். இதனாலேயே அவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது அந்த பகுதி மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




