'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் வெங்கட் தெரிவித்துள்ளார். ரோஜா தொடரில் நாயகன் அர்ஜூனுக்கு தம்பியாக அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வந்தார். இந்த தொடரில் பூஜா - அஸ்வின் - அனு என்ற முக்கோண காதல் கதை எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது அஸ்வின் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
அஸ்வின் - பூஜா திருமணத்துக்கு பின் பூஜா வீட்டிற்கு சென்றுவிடும் அஸ்வின் கதாபாத்திரம் தனது முக்கியத்துவத்தை இழந்து வீக்காக மாறியுள்ளது. இதற்கிடையில் பல எபிசோடுகளாக அஸ்வினை ரோஜா சீரியலில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட், ரோஜா சீரியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'அஸ்வினாக நடித்த எனக்கு அதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இனி நீங்கள் என்னை ஜீவாவாக(பாண்டியன் ஸ்டோர்ஸ்) பார்க்கலாம்' என குறிப்பிட்டிருந்தார்.
வெங்கட் தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.