இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
யாரடி நீ மோகினி சீரியலின் 2-வது க்ளைமாக்ஸை வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பபோவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஹிட் அடித்த யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் நிறைவுற்றது. மிகவும் வித்தியாசமான முயற்சியாக தொடரின் க்ளைமாக்ஸை ரசிகரக்ளிடம் ஒப்படைத்திருந்த சீரியல் குழு சென்ற வார ஞாயிறு அன்று க்ளைமாக்ஸை ஒளிபரப்பியது. சீரியல் முடிவடைந்ததையொட்டி அதில் நடித்த நடிகர்களும் மிகவும் எமோஷ்னலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வந்தனர்.
இந்நிலையில், யாரடி நீ மோகினி சீரியலுக்கு மற்றொரு க்ளைமாக்ஸ் வைத்திருப்பதாக சீரியல் குழு அறிவித்து புரோமோ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ஒரே சீரியலுக்கு இரண்டு க்ளைமாக்ஸ் வைத்திருப்பது இதுவே முதல் முறை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
யாரடி நீ மோகினி சீரியலின் இரண்டாவது க்ளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.