இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விஜய் டிவியின் டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதிதாக இணைந்திருக்கிறார் தீபிகா. தொலைக்காட்சி தொகுப்பாளரான தீபிகா, கலர்ஸ் தமிழ் சீரியலில் துணை நடிகையாக நடிப்பிலும் அசத்தினார். இதனையடுத்து அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தின் ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் ஒரு நெகடிவ் தன்மை என்பதால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவர், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து உங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க எது பண்ணாலும் எனக்கு பிடிக்காமல் போகுது' என தீபிகா குறித்து தெரிவித்துள்ளார். இதை கவனித்த தீபிகா 'என்னங்க சாபம் விடுறீங்க, அது வெறும் நடிப்பு தான். சீரியஸா எடுத்துகாதீங்க' என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ளார்.