மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பப்லுவின் வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வெளியானதை பார்த்த நெட்டீசன்கள், இந்த வயதிலும் இப்படியா என வாயை பிளந்து பாராட்டி வருகின்றனர்.
பப்லு என்கிற பிருத்விராஜ்வ், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி ஏறக்குறைய 40 வருடங்கள் வெற்றிகரமான கலைஞனாக திரையுலகில் வலம் வருகிறார். தற்போது கண்ணானே கண்ணே சீரியலில் நடித்து வரும் பப்லுவுக்கு வயது 55.
இந்நிலையில், உடம்பை பிட்டாக வைத்திருக்க அவர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஹல்க் படத்தின் முன் நின்று இரண்டு கைகளில் டம்பள்ஸை தூக்கி பப்லு வொர்க் அவுட் செய்கிறார். இதை பார்த்த பார்வையாளர்கள் இந்த வயதிலும் இப்படியா? நீங்க வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.