அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை | வசூலைக் குவிக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | டிசம்பர் 19ல் ‛கொம்புசீவி' ரிலீஸ்: இதிலாவது ஜெயிப்பாரா விஜயகாந்த் மகன்? | தடை நீங்கியது : டிசம்பர் 12ல் 'அகண்டா 2' ரிலீஸ் அறிவிப்பு |

விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா. ரித்திகா, சில தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்த போதிலும், பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலாவுடன் அவர் அடித்த ரைமிங் வசனங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தனக்கான ரசிகர்களை கண்டுகொண்டார்.
தற்போது பாக்கியலெட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா, அந்த தொடரில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரித்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பாக்கியலெட்சுமி தொடரில் தொடக்கத்தில் ரித்திகாவுக்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால், தற்போது விஜே விஷால் - ரித்திகா ஜோடி சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.