'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா, செட்டில் வைத்து போட்ட குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான் தொடர்ந்து டி.ஆர்.பியில் நல்ல இடத்தை பெற்று வருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த சீரியலில் ரோஜாவாக நடிக்கிறார் பிரியங்கா நல்காரி. நாயகன் அர்ஜூனுக்கும் நாயகி ரோஜாவுக்கும் இருக்கும் ரொமான்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் விறுவிறுப்பான கதை நகர்வால் சீரியல் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது.
இந்நிலையில் இந்த டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ரோஜா சீரியல் குழு கலந்து கொண்டது. அந்த செட்டில் மாடர்னான ட்ரெஸில், தன் சீரியல் மாமியார் காயத்ரி சாஸ்த்ரியுடன் பிரியங்கா போடும் குத்தாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. நெட்டீசன்கள் கையில் சிக்கிய் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாக பரவி வருகிறது.




