துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா |
சின்னத்திரை பிரபலங்களான மதன் - ரேஷ்மா ஜோடி தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். இது குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்கள் வேலைக்காக ஏன் காதலை மறைக்க வேண்டும் என கூறினர்.
சின்னத்திரையில் பிரபலமான மதன் - ரேஷ்மா இருவரும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமாயினர். இவர்கள் இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து கடந்த ஜனவரி மாதம் வெளியுலகிற்கு தெரிவித்தனர்.
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் "அபி டெய்லர்" தொடரில் ஜோடியாக நடித்து வரும் இருவரிடமும் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் சினிமா நடிகர், நடிகைகள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக கூறாதபோது, நீங்கள் எப்படி சொன்னீர்கள்? என்ற கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த மதன் - ரேஷ்மா ஜோடி,வேலைக்காக காதல் வாழ்க்கையை ஏன் மறைக்க வேண்டும்?. அதேநேரம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை மறைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. என கூறினர்.
மேலும், தங்களுடைய வாழ்க்கையை சமூகவலைதள பக்கங்கங்களில் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.