மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சமையலும், நகைச்சுவையும் கலந்த ஒரு நிகழ்ச்சி.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விடவும் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கிறது என்பதே டிவி பார்க்கும் பலரின் கருத்தாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் தனித்து காமெடி செய்து ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இவர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நிகழ்ச்சியில் தான் பங்கு பெறப் போவதில்லை என மணிமேகலை தெரிவித்துள்ளார்.
அது குறித்து இன்ஸ்டாகிராமில், “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் படிச்சேன், நல்லா இருந்தது இந்த மேற்கோள். எனக்கு குட்டி விபத்து ஏற்பட்டிருக்கு, ஆனால், இப்போது நலமாக இருக்கிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வேன். நிச்சயம் எனது குழுவை மிஸ் செய்வேன், ஒரு வாரத்தில் திரும்ப வந்துவிடுவேன், உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கிய குறிப்பு - முக்கியமா சுடு தண்ணி தூக்கும் போது பாத்து தூக்குங்க,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுடு தண்ணி தூக்கும் போது அந்தப் பாத்திரம் தவறி கீழே விழுந்து மணிமேகலைக்கு காயம்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதைத்தான் அவர் குட்டி விபத்து எனக் குறிப்பிட்டுள்ளால் போலும்.