சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பிறகு வாணி ராணி தொடரில் நடிக்கத் தொடங்கியர் லட்சுமி ஸ்டோர், ரோஜா, மின்னலே, நாயகி உள்பட பல தொடர்களில் நடித்தார்.
இதற்கிடையில் சேட்டை, வாயை மூடி பேசவும், நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்தார். தற்போது வஞ்சகம், ஹேய் சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் திருமணம் செய்ய இருக்கும், காதலன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் பெயர் ராகவ் என கூறியிருப்பவர் அவர் பற்றிய மற்ற விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: நான் இன்ஸ்டாகிராமில் சேரும் போது நான் ஒரு டீன் ஏஜ் பொண்ணு. என்னுடைய நண்பர்களை பின் தொடர்ந்தேன். புது புது நண்பர்களை உருவாக்கினேன். என்னை பற்றிய சில விஷயங்களை என் சிறிய உலகத்துடன் பகிர்ந்து கொண்டேன். நான் நடிகை ஆனதும் ரசிகர்களாகிய நீங்கள் என் சிறிய உலகத்தின் ஒரு அங்கமாகி விட்டீர்கள். ஒவ்வொரு நாளும் நாம் அதிகம் வளர்ந்தோம். நீங்கள் என் மீது காட்டும் அன்பும் அதிகமானது. அதற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நம் உலகத்திற்கு ஒரு லேட்டஸ்ட் வரவை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.