மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை | நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி தொடர் மிகவும் புகழ்பெற்றது. இந்தியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகிறது. இதுவரை 4 பாகங்களாக ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாளை முதல் (ஜன 21) நாகினியின் 5வது பாகம் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்ய யுகத்தில், நாகினி (ஹினா கான்) குலத்தின் முன்னோடியான ஆதி நாகினியாக இருக்கிறார். இந்த நிலையில் அவள் நாக் ஹரிஷை (மோகித் மல்கோத்ரா ) அதிதீவிரமாக காதலிக்கிறாள். ஆனால் அவர்களது காதல் மகிழ்ச்சியான முடிவை எட்டுவதற்கு முன்பே, விதி அவர்களை பிரிக்கிறது.
அதே சமயம், கலு ஆகாஷ் (தீரஜ் தூப்பர் ) நாகினியை வெறித்தனமாக காதலிக்கிறான், ஆனால் அவனது காதலை நாகினி ஏற்க மறுக்கிறாள். இதனால் பழிவாங்கும் போக்குடன் கதை துவங்குகிறது. இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் நாகினியின் காதல் நிறைவேறாமல் இருக்கும் நிலையில் அவள் இறக்கிறாள். அவள் இறக்கும்போது ஒரு சபதம் ஏற்கிறாள். இதனைத் தொடர்ந்து அவள் கலியுகத்தில் மறுபிறவி எடுக்கிறாள். கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் தனது சபதத்தை நிறைவேற்ற பழிக்கு பழி வாங்கவும் அவள் துடிக்கிறாள். அவள் காதலனுடன் மீண்டும் சேருவாளா? அல்லது விதி அவர்களின் கதைக்கு மற்றொரு திருப்பத்தைக் கொண்டு வருமா? என்பது மீது கதை.