இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றியும் தனித்தனியாக தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி உள்ளன. விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் ஒருங்கிணைத்து விஷ்ணு தசாவதாரம் என்ற தொடர் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இது டப்பிங் சீரியல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் முழுக்க முழுக்க தமிழில் தயாராகும் தொடர் என்று சேனல் அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கு டைசன்பால் இசை அமைக்கிறார், அனில் மிஸ்தா ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் படேல் இயக்குகிறார். ஜுபி கோச்சர், தீரஜ்குமார், சுனில் குப்தா தயாரிக்கிறார்கள். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். திரைப்படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 22ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.