'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக, குமரியாக நடித்தார். சின்னத்திரைக்கு வந்தவர் இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்து சீரியல் தயாரிப்பாளராகவும் ஆனார். தலையணை பூக்கள், தாமரை தொடர்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் வாணி ராணி சீரியலும் நிறைவடைய இருக்கிறது.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அன்னக்கிளி சீரியலில் வில்லி அவதாரம் எடுக்க இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தனது கணவர் இசையுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரை தயாரித்தவர் இப்போது விஜய் டி.விக்காக அன்னக்கிளி தொடரை தயாரிக்கிறார்.
தனது முதல் தயாரிப்பான நிறம் மாறாத பூக்களில் நடிக்காத நீலிமா ராணி, அன்னக்கிளியில் வில்லியாக நடிக்க இருக்கிறார். இதுவரை சீரியல்களில் வராத துர்கா என்ற டெரர் வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.