'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, விஜய் வசந்த், ரோகினி, ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர், தம்பி ராமய்யா, சார்லி, காளி வெங்கட், ராம்தாஸ், மன்சூரலிகான், சரத்லோகித்தாஸ், உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வேலைக்காரன். தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜா இயக்கிய படம். அனிருத் இசை அமைத்திருந்தார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கார்பரேட் வணிக நிறுவனங்களுக்கு எதிராக போராடும் ஒரு குப்பத்து இளைஞனின் கதை. காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சீரியசாக நடித்திருந்த படம். உலகத்தின் மிக உயர்ந்த சொல் செயல் என்பதை வலியுறுத்திய படம். 60 கோடி ரூபாய் தயாரிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. வெளியாகி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகிறது. வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந் தேதி ஒளிபரப்பாகும் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.