கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
வருகிற 14ந் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக சுடச்சுட மிக சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
மெர்சல்
கடந்த அக்டோபர் மாதம் 18ந் தேதி தீபாவளியையொட்டி வெளியான படம் மெர்சல். விஜய், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யராஜ் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். சுமார் 120 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. விஜய், வெற்றி மாறன், டாக்டர் மாறன், தளபதி என மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தார்.
படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிக்கு எதிரான வசனங்கள் இருந்தது. அதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் படம் வசூலைக் குவித்தது. இந்தப் படம் ஜீ தமிழ் சேனலில் பொங்கல் தினத்தன்று மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. தீபாவளிக்கு வெளியான விஜய் படம், அதற்கு அடுத்த பொங்கலுக்கு டி.வியில் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை.
தீரன் அதிகாரம் ஒன்று
கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங், போஸ் வெங்கட், அபிமன்யூ சிங் நடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கிய படம். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
தமிழக போலீஸ் வரலாற்றில் பெருமையாக குறிப்பிடப்படும் ஆபரேஷன் பவேரியா நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவான படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக்கிற்கு வெற்றி கொடுத்த படம். கடந்த நவம்பர் மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற படம், 57 நாட்களில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. விஜய் டி.வியில் பொங்கல் அன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
அறம்
நயன்தரா நடிப்பில் உருவான அறம் பரவலான பாராட்டுகளையும், வெற்றியையும் பெற்றது. கோபி நயினார் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தை நயன்தாராவே தயாரித்திருந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழந்த ஒரு குழந்தையை காப்பாற்றும் நேர்மையான கலெக்டரின் கதை.
கடந்த நவம்பர் மாதம் வெளியான படம், பொங்கலன்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. முன்னணி தொலைக்காட்சி இதனை காலை 11 மணிக்கு ஒளிபரப்புகிறது. இந்த மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.