சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

இயக்குனர் ஓ.என்.ரத்னம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கேளடி கண்மணி. அர்ணவ், கிருத்திகா, சாதனா உள்பட பலர் நடித்துள்ள இந்த தொடர் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தொடரில் நாயகனாக நடிக்கும் அர்ணவின் நடிப்புக்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இதையடுத்து அவர் பாலிமர் சேனலில் ஒளிபரப்பாகயிருக்கும் ஒரு புதிய மெகா தொடரில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கேளடி கண்மணி போலவே புதிய சீரியலிலும் பாசிட்டீவான ஹீரோ வேடத்தில் நடிக்கிறாராம் அர்ணவ். இதுதவிர, சினிமாவிலும் நடிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
இதுகுறித்து அர்ணவ் கூறுகையில், கேளடி கண்மணி சீரியல் எனக்கு ரொம்ப நல்ல பெயர் வாங்கித்தந்துள்ளது. இந்த சீரியல் கொடுத்த அனுபவம் காரணமாக எந்தமாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், சீரியல்களில் பாசிட்டீவான வேடத்தில நடித்து வரும் நான், சினிமாவில் நெகடீவ் வேடங்களில் நடித்து ரீச்சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதேசமயம் பாசிட்டீவ் வேடம் வந்தாலும் நடிப்பேன். எதுவாக இருந்தாலும் அழுத்தமான வேடமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
சமீபத்தில்கூட சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் எதிர்பார்க்கிற மாதிரியான வேடங்கள் இல்லை என்பதால் மறுத்து விட்டேன. என்னைப்பொறுத்தவரை பத்து சீனில் வந்தாலும் அந்த ரோல் பேசப்படும் வகையில் இருக்க வேண்டும். ஏதோ வந்தோம் போனோம என்று நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால்தான் நல்ல சினிமா வாய்ப்புகளுக்காக வெயிட்டிங்கில் இருக்கிறேன் என்கிறார் அர்ணவ்.