என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடி தொடர் மடிப்பாக்கம் மாதவன். எஸ்.மோகன் இயக்கி வரும் இந்த தொடரில் வெள்ளரிக்காய் புகழ் ராம்ஜி, மதுமிதா, நளினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். சுமார் 450 எபிசோடுகளை கடந்து விட்ட இந்த தொடரில் மாதம் ஒரு கதை இடம்பெற்று வருகிறது. இந்த தொடருக்கு நேயர்கள் மத்தியில் வரவேற்பு இருந்துபோதிலும், இந்த மாதத்தோடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாம். அதனால் படப்பிடிப்பு நடத்துவதை நிறுத்தி விட்டனர். ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள எபிசோடுகள் மட்டுமே அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது.
எதற்காக தொடர் நிறுத்தி வைக்கப்படுகிறது? என்று அந்த தொடரில் நடித்து வருபவர்களிடம் கேட்டபோது, மடிப்பாக்கம் மாதவன் தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவதால் நிறைய நேயர்கள் பார்க்கிறார்கள். ஆனபோதும், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், திமுக பிரச்சாரம் சம்பந்தப்பட்ட செய்திகள் இனி கலைஞர் தொலைக்காட்சியில் அதிகமாக இடம்பெறப்போகிறது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், இனிமேல் அவர் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் அதிகமாக ஒளிபரப்பப்பட உள்ளது. மடிப்பாக்கம் மாதவன் தொடர் வெளியாகும் இரவு 9.30 மணி என்பது அனைவரும் டிவி பார்க்கும் நேரம் என்பதால், அந்தநேரத்தில் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகளை கூடுதலாக ஒளிபரப்பு திட்டமிட்டுள்ளார்கள். அதனால், தேர்தல் முடிகிற வரைக்கும் இனிமேல் மடிப்பாக்கம் மாதவன் தொடர் ஒளிபரப்பாகாது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் தொடரும் என்கிறார்கள்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            