சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு, மதுரை டு தேனி, வேங்கை உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரிதிகா. அதன்பிறகு திருமுருகனின் நாதஸ்வரம் தொடர் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். அந்த தொடரில் மலர் என்ற கேரக்டரில் நடித்த ஸ்ரிதிகாவுக்கு நேயர்கள் மத்தியில் பெரிய இடம் கிடைத்தது. விளைவு, அதைத் தொடர்ந்து மாமியார் தேவை, உறவுகள் சங்கமம், வைதேகி, குலதெய்வம், என் இனிய தோழியே என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாகி விட்டார்.
சீரியல்களில் நடித்து வரும் அனுபவம் பற்றி ஸ்ரிதிகா கூறுகையில்,
நான் படிக்கிற காலத்தில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறேன். அப்போது எங்கள் குடும்பம் மலேசியாவில் இருந்தது. அதன்பிறகு சென்னை வந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். சினிமாவில் நடித்து வந்தபோதுதான் சின்னத்திரையில் திருமுருகன் இயக்கியிருந்த நாதஸ்வரம் தொடரில் என்னை ஹீரோயினாக நடிக்க அழைத்தனர். லீடு ரோல் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டேன். அந்த தொடரில் திருமுருகனுக்கு ஜோடியாக மலர் என்ற கேரக்டரில் நடித்தேன்.
அனைவரையும் அணுசரித்து நடந்து கொள்ளக்கூடிய நல்ல குடும்பப் பெண் வேடம். அதனால் சீரியல் பார்க்கும் பெண்களுக்கு என்னை ரொம்ப பிடித்து விட்டது. அந்த தொடரில் படித்த பெண்ணாக அதேசமயம் ரொம்ப சிம்பிளான பெண்ணாக நடித்தேன். அந்த ரோல் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. அதில் என் நடிப்பைப்பார்த்து விட்டு பல தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் மனசுக்குப்பிடித்த கதாபாத்திரங்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன்.
எல்லா சீரியல்களிலுமே பாசிட்டீவ் கேரக்டர்களாக நடிப்பது ஏன்?
என் தோற்றம் அப்படி இருக்கிறது. அதனால் என்னை பாசிட்டிவ் வேடங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள். நானே ஒரு மாறுதலுக்காக நெகடிவ் வேடம் கேட்டாலும் அது உங்களுக்கு மேட்சாக இருக்காது என்று சொல்லி விடுகிறார்கள். என்றாலும், எதிர்காலத்தில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவிலான நெகடிவ் வேடங்களிலும் நடிப்பேன். அந்தமாதிரி நடிக்கும்போது இன்னும் புதுமாதிரியான பர்பாமென்ஸ் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். என் விருப்பத்தை புரிந்து கொண்டு டைரக்டர்கள்தான் என்னை நெகடீவ் ரோல்களில் நடிக்க வைக்க முன்வர வேண்டும்.
சீரியல் நடிகர் நடிகைகளெல்லாம் சினிமாவில் ஆர்வம் காட்டுகிறார்களே. சினிமா நடிகையான நீங்கள் தொடர்ந்து சீரியலில் மட்டும் நடிப்பதேன்?
என்னைப்பொறுத்தவரை சினிமா, சீரியல் என்று பிரித்துப்பார்ப்பதில்லை. சினிமாவில்தான் நடிக்க வந்தேன். சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அப்போது சீரியலில் நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் அதை பயன்படுத்திக்கொண்டேன். அடுத்தபடியாக சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவிலும் நடிப்பேன். ஒரு நடிகையாக இரண்டு துறைகளிலும் நடிக்கவே ஆசைப்படுகிறேன். அந்தவகையில், என் இலக்கு சின்னத்திரை மட்டுமே அல்ல.
அதேசமயம், எனக்கு பிடிக்காத ஒரே விசயம் கிளாமராக நடிப்பதுதான். சினிமாவில் நான் பெரிதாக வளராததற்கு அதுவே காரணம். அதனால் இப்போதும் என் திறமையை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வேடங்கள் சினிமாவில் கிடைத்தால் இறங்கி விடுவேன். ஆனால் கிளாமராக நடிக்க சொன்னால் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அந்த வகையில், சீரியலில் நடிப்பது ரொம்ப கெளரவமாக உள்ளது. கிடைக்கிற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் இப்போதைக்கு என் பயணம் சீரியல்களில் முழு ஈடுபாட்டுடன் சென்று கொண்டிருக்கிறது. சினிமாவிலும் என் இமேஜை பாதிக்காத நல்ல வேடங்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஸ்ரிதிகா.