ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? |
ஜெயா டிவியில் நீண்டகாலமாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் பாத்திமா பாபு. அதோடு, சீரியல், சினிமா என இரண்டு துறையிலும் கேரக்டர் ரோல்களில் நடித்திருப்பவர். சமீபத்தில் நடிகர் சரத்குமார் அணியினர் ரஜினியை சந்தித்து நடிகர் சங்க தேர்தலின்போது தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு சென்றபோது பாத்திமா பாபுவும் உடன் சென்றார். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்கள் நடிகர் சங்க தேர்தலில் அவரவர் விருப்பப்படி வாக்களிக்கலாம். ஆனால் எந்த அணியிலும் சேர்ந்து கொண்டு ஓட்டு வேட்டை நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, பாத்திமா பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக, ஜெயா டிவியை விட்டே அவரை நீக்கி விட்டதாக கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பரபரப்பு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இதுபற்றி பாத்திமா பாபுவைக் கேட்டால், ஜெயா டிவியில் நான் எப்போதும் போலவே இப்போதும் செய்தி வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சரத்குமாருடன் சேர்ந்து நான் ரஜினியை சந்தித்ததற்கு யாரும் என்னை கண்டிக்கவில்லை. மேலும், அதிமுக தலைமையின் ஆணைக்கு எப்போதுமே நான் கட்டுப்பட்டு நடப்பவள். நடிகர் சங்க விவகாரத்திலும் நான் தலைமை சொல்படிதான் நடந்து வருகிறேன். அதனால் என்னை ஜெயா டிவியில் இருந்து நீக்கி விட்டதாக வெளியான செய்தி வெறும் வதந்தியே. இதை யாரும் நம்ப வேண்டாம் என்கிறார் பாத்திமா பாபு.