பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகமாக வலம் வருகிறார். சின்னத்திரைக்கு முன்பாக ஏராளமான படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாத்திமா பாபு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்து அசத்தினார். அதன்பின் சீரியலில் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, 'இன்று - புதிய தெலுங்கு சீரியலில் முதல் நாள்' என்று தனது புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் பாத்திமா பாபுவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.