'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு பிரபலமடைந்த பலரில் நடிகை விசித்திராவும் ஒருவர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் விசித்திரா இருந்த போது ரிவியூ செய்த வனிதா அவரை மிகவும் திட்டியதை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விசித்திரா, 'வனிதா இந்த முறை ஒரு விமர்சகராக பிக்பாஸ் நிகழ்ச்சியை அணுகவில்லை. ஒரு அம்மாவாக தான் அணுகினார். தனது மகள் ஜோவிகா ஜெயிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே தான் போட்டியாளர்கள் அனைவரையும் திட்டிக்கொண்டிருந்தார். ரிவியூ செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.




