தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

அழகி, சொந்தம் பந்தம், ரெட்டை வால் குருவி என பல தொடர்களில் அதிரடியான வேடங்களில் நடித்தவர் கரோலின். இதில் அழகி தொடரில் நடித்தபோது தமிழ்நாட்டு பெண்களின் அதிகப்படியான வெறுப்புக்கு ஆளானார். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அவரை அதிரடியான வில்லியாக சித்தரித்து விட்டது. தற்போது அபூர்வ ராகங்கள் என்ற தொடரிலும மீனா என்கிற வில்லி வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கரோலின்.
அவரிடத்தில் எல்லா தொடர்களிலுமே வில்லியாகவே நடிப்பது ஏன். இதை நீங்களாகவே விரும்பி நடிக்கிறீர்களா? இல்லை உங்களை தேடி வருவதே அந்த மாதிரி வேடங்கள்தானா? என்று கேட்டபோது, என்னைப்பொறுத்தவரை எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் என்ன காரணமோ, முதலில் நான் வில்லி வேடத்தில் நடித்தே பிரபலமானதால், எல்லோருமே என்னை வில்லியாகவே பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அவர்களிடத்தில், பாசிட்டிவான வேடம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டால், இந்த ஸ்கிரிப்ட்டை பண்ணும்போதே வில்லி கதாபாத்திரத்திற்குள் நீங்கள் வந்து உட்கார்ந்து கொண்டீர்கள். அதனால் இந்த வேடம்தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறி விடுகிறார்கள். டைரக்டர்களே அப்படி சொல்லும்போது நான் என்ன செய்ய முடியும். அதனால் எனக்கு கிடைக்கிற வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அபூர்வ ராகங்கள் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, வில்லி வேடம் இருக்காது என்றுதான் நினைத்தேன்.




