எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'மிராக்கிள், பயோபிக் ஆப் பிலிம் இன்டஸ்ட்ரி' ஆகிய படங்களில் நடித்தவர் சுமன் ராணா. தற்போது 'லெட்ஸ் மீட்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சுமன் ராணாவுக்கு ஜோடியாக தனுஜ் விர்வானி நாயகனாக நடித்துள்ளார். இந்தகால சமூக ஊடக காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது.
இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமன் ராணா, தனது கதாபாத்திரம் குறித்து கூறுகையில், ''படத்தில் கார்ப்பரேட் உலகில் பணியாற்றும் ரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். காலையில் வேலைக்கு செல்வது, மாலையில் வீடு திரும்புவது என சுவாரஸ்யமில்லாத வாழ்க்கையில் இருக்கும் ரியா, தன் தோழிகளின் அறிவுரையின் பேரில், நிகில் (தனுஜ் விர்வானி) என்பவரிடம் பேசி பழகுகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே இதன் கதை'' என்றார்.
டாக்டருக்கு படித்துவிட்டு நடிகையாக மாறியுள்ள சுமன் ராணா, நடிப்பு தொழிலை தேர்ந்தெடுத்தது குறித்து கூறும்போது, ''காஷ்மீரை சேர்ந்த நான், அங்கு பலர் இறப்பதை பார்த்து சிறு வயதில், டாக்டராக வரவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் முடிந்தவரை மக்களை காப்பாற்ற முடியும் என நினைத்து படித்து டாக்டரானேன். பிறகு வாழ்க்கை என்னை இங்கு (சினிமாவுக்கு) கொண்டு வந்துள்ளது. தற்போது நடிகையாக இருக்கும் நான், எதிர்காலத்தில் பேச்சாளராகலாம், யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ''இனிவரும் காலங்களில் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போதெல்லாம் அதில் நடிப்பேன். ஆனால், டிவி சீரியல்களில் எப்போதும் நடிக்க மாட்டேன். ஏனெனில், சீரியல்களில் நடித்தால் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடிக்க வேண்டும். ஓய்வு கிடைக்காது, சீரியல் முடியும் வரை ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தான் தொடர முடியும். அதுவே, படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்றால் புதிது புதிதான கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்'' என்றார்.