இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 16ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் சைப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைப் அலிகானுக்கு கத்தி குத்து ஏற்பட்ட சமயம் அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றியவர் ஆட்டோ டிரைவர் பஜன்சிங் ராணா. அந்த சமயத்தில் அவர் பணம் கூட வாங்கவில்லை. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனையிலேயே சந்தித்துள்ளார் சைப். அதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சைப் கவுரவித்தார்.