சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ |
சுந்தரி தொடரின் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார் நடிகை கேப்ரில்லா செல்லஸ். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தடைகளை தாண்டி இன்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் தன் காதலர் ஆகாஷை கணவராக கைபிடித்த அவருக்கு தற்போது குழந்தை பிறக்கவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சுந்தரி தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேப்ரில்லாவே தெரிவித்திருந்தார். தற்போது அவர் குழந்தைப்பேறுக்காக தனது சொந்த ஊருக்கு செல்கிறார். இதனையடுத்து ஊருக்கு கிளம்பும் முன் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேப்ரில்லா மீடியா பயணத்திற்கு ப்ரேக் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.