பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர் பாக்கியலெட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த தொடர் சமீபகாலமாக அயர்ச்சியான திரைக்கதையுடன் ஸ்லோவாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் கதாநாயகனான சதீஷ், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாக்கியலெட்சுமி தொடர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கடந்த 5 வருடங்களாக பாக்கியலெட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் விரைவில் வரவிருக்கிறது. இத்தனை நாட்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பாக்கியலெட்சுமி தொடரில் சிலவற்றை பிடிக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீரியலின் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இருக்கும்' என்று கூறி இருக்கிறார்.
இதன்மூலம் பாக்கியலெட்சுமி சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வர உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.